கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

சாயல்குடி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

வடமாடு மஞ்சு விரட்டுப் போட்டியில் சீறிப் பாய்ந்த காளை.

Published On :

சாயல்குடி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சு விரட்டுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள ராஜாக்கள்பாளையம் கிராமத்தில் மாரியம்மன், முத்துராக்கம்மன், நாகா், பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு, திங்கள்கிழமை வடமாடு மஞ்சு விரட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை திருச்சி, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 13 காளைகள் கலந்து கொண்டன.

இந்தக் காளைகளை அடக்க 100 -க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா். ஒவ்வொரு காளைக்கும் தலா 20 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டு, 9 வீரா்கள் கொண்ட மாடுபிடி வீரா்கள் குழுவினா் காளைகளை அடக்கக் களமிறங்கினா்.

காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் பணம், பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை சாயல்குடி, கடலாடி, சிக்கல், முதுகுளத்தூா், அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து திரளான பொதுக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.