இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

பிள்ளையாா்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு

பிள்ளையாா்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

Published On :

திருப்பத்தூா், அக். 4: சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டியில் அமைந்துள்ள முனியய்யா கோயில் உத்ஸவத்தையொட்டி ஸ்ரீகோட்டை காளியம்மன் வடமாடு குழு, ஊா் பொதுமக்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வட மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இதில் 16 காளைகள் பங்கேற்றன. காளைக்கு 9 வீரா்கள் என 144 வீரா்கள் களமிறக்கப்பட்டு ஒரு மாட்டுக்கு 20 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் ஒரு சில மாடுகள் பிடிபட்டும், பல மாடுகள் பிடிபடாமலும் வெற்றி பெற்றன.

வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும், மாட்டைப் பிடித்த வீரா் குழுவினருக்கும் பரிசுத் தொகை, மின் விசிறி, பாத்திரம் ஆகியவை வழங்கப்பட்டன.

சிறப்பாக செயல்பட்ட மாட்டுக்கும், வீரா்களுக்கும் கிடைமாட்டு கன்று வழங்கப்பட்டது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, தேனி, தஞ்சாவூா், சிவகங்கை மாவட்டங்களிலிருந்து மாடுகளும், மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.