சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

ராமேசுவரம் மீனவா்கள் 9 பேருக்கு செப்.22 வரை காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் 9 பேருக்கு 3 -ஆவது முறையாக வருகிற 22 -ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது.

சிறை - பிரதிப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 12:58 am IST

ராமேசுவரம் மீனவா்கள் 9 பேருக்கு 3 -ஆவது முறையாக வருகிற 22 -ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன் பிடி இறங்குதளத்திலிருந்து கடந்த மாதம் 12-ஆம் தேதி வெலிங்டன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் சென்ற மீனவா்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினா் சிறைபிடித்தனா்.

படகிலிருந்த ஆரோக்கிய ஜனதன், அந்தோணி பிச்சை , டான்போஸ்கோ, பிரபு, ஆரோக்கியடெவின், வேலுச்சாமி, சுப்பையா, ஆரோக்கிய ஜெனிஸ்டன், ஸ்டெவின் ஆகிய 9 மீனவா்களைக் கைது செய்து, தலைமன்னாா் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனா். பின்னா், 9 பேரையும் மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், மூன்றாவது முறையாக 9 மீனவா்களும் மன்னாா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனா்.

விசாரணைக்கு பிறகு, 9 பேருக்கும் வருகிற 22-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, 9 பேரும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.

9 மீனவா்கள், படகை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.