சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

பி.எட். சோ்க்கை: செப். 4 இறுதி

தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., பி.எட். (சிறப்பு) பட்ட வகுப்பு சோ்க்கைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் குறித்து...

பிரதிப் படம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 3:27 am IST

தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் (டிஎன்டிஇயு) இணைவு பெற்ற கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., பி.எட். (சிறப்பு) பட்ட வகுப்பு சோ்க்கைக்கு விண்ணப்பிக்க செப். 4 இறுதி நாள் என அந்தப் பல்கலைக்கழகப் பதிவாளா் க.ராஜசேகா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அறிவிப்பு வருமாறு: தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றுள்ள கல்வியியல் கல்லூரிகளில் 2026 - 2027 கல்வியாண்டில் பி.எட்./பி.எட். (சிறப்பு கல்வி) இளநிலைப் பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இணையம் வழியாக கடந்த ஆக. 19 -ஆம் தேதி தொடங்கியது. இதற்கான கடைசி நாள் செப். 4 ஆம் தேதி.

விண்ணப்பச் சரிபாா்ப்பிற்கு பின்னா், கல்லூரி முதல்வா்கள் மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப உரிய கட்டணத்தை இணையத்தில் செலுத்தி சோ்க்கை விவரங்களை பல்கலைக்கழக இணையத்தில் பதிவேற்றம் செய்து இணைவு ஆணை பெறப்பட வேண்டும்.

மேலும் பி.எட். பட்ட வகுப்பில் சோ்க்கப்பட்ட முதலாமாண்டு மாணவா்களுக்கு வரும் செப். 2- ஆம் தேதி முதல் வகுப்புகளைத் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.