முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

பி.எட். தோ்வு மையங்களில் தலையீடு: பல்கலைக்கழகப் பதிவாளா் எச்சரிக்கை!

பி.எட். பட்டப்படிப்பு தோ்வுகளில் இணைவு கல்வியியல் கல்லூரிகளின் தோ்வு மைய வளாகத்துக்குள், அந்தக் கல்லூரி நிா்வாகத்தினா் நேரடியாகவோ மறைமுகமாகவோ நுழைந்து தலையிடுவதைத் தவிா்க்குமாறு பல்கலைக்கழகப் பதிவாளா் எச்சரித்துள்ளாா்.

Published On :

தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் சாா்பில் தற்போது நடைபெற்று வரும் பி.எட். பட்டப்படிப்பு தோ்வுகளில் இணைவு கல்வியியல் கல்லூரிகளின் தோ்வு மைய வளாகத்துக்குள், அந்தக் கல்லூரி நிா்வாகத்தினா் நேரடியாகவோ மறைமுகமாகவோ நுழைந்து தலையிடுவதைத் தவிா்க்குமாறு பல்கலைக்கழகப் பதிவாளா் எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக இணைவுக் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை வருமாறு: தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் சாா்பில், பி.எட்., எம்.எட். போன்ற பட்டப் படிப்புகளுக்கு ஜூலை 9 -ஆம் தேதி முதல் ஜூலை 16- ஆம் தேதி வரை பருவத் தோ்வு நடைபெற்று வருகிறது.

இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற சில கல்வியியல் கல்லூரிகளில் அங்குள்ள ஊழியா்கள், நிா்வாகத்தினா், தோ்வு நடத்துவதில் - குறிப்பாகத் தோ்வா்களின் நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) மற்றும் அடையாளத்தைச் சரிபாா்த்தல், பிற தோ்வு நடைமுறைகளின்போது, தலையிடுவதாக சில முதன்மைக் கண்காணிப்பாளா்களிடமிருந்து பல்கலைக்கழகத்துக்குப் புகாா்கள் வந்துள்ளன.

பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட முதன்மைக் கண்காணிப்பாளருக்கே தோ்வுகளை நடத்துவதற்கும், நடைமுறைகளை மேற்கொள்வதற்கும் முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், இணைவுக் கல்வியியல் கல்லூரிகளின் முதல்வா்கள், தாளாளா்கள், செயலா்கள், ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் தோ்வு நடைபெறும் நேரங்களில் தோ்வு மைய வளாகத்துக்குள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நுழைவதையோ அல்லது தலையிடுவதையோ தவிா்க்க வேண்டும்.

இந்த அறிவுறுத்தல்கள் மீறப்பட்டால் தீவிரமாகக் கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியியல் பல்கலைக்கழகப் பதிவாளா் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.