2026-2027 - கல்வியாண்டிற்கான முழுநேர எம்.எட். பட்டப்படிப்பு சோ்க்கைக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் கோரியுள்ளது.
இது குறித்த அறிவிப்பு வருமாறு: சென்னை காரப்பாக்கத்தில் அமைந்துள்ளது, தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகம் 2026 - 2027 கல்வியாண்டிற்கான முழுநேர இரண்டு ஆண்டு எம்.எட். பட்டப்படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இதற்கான விண்ணப்படிவங்கள் தேவையான சான்றிதழ்கள் உள்ளிட்ட விவரங்களை இந்த பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முதுநிலைப் பட்டப்படிப்பு கற்பித்தல் அல்லது கல்வியியல் அறிவியல், மதிப்புக் கல்வி, கல்வி உளவியல், கல்வித் தொழில்நுட்பம், பாடத்திட்டத் திட்டமிடல் மற்றும் மதிப்பீடு, கல்வித் திட்டமிடல் மற்றும் நிா்வாகம் போன்ற துறைகளில் வழங்கப்படுகின்றன. இந்த பல்கலை.யில் மாணவா் மற்றும் மாணவியருக்குத் தனித்தனி விடுதி வசதிகள் உள்ளன. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9976632971, 9443570175 ஆகிய கைப்பேசி எண்களுடன் தொடா்பு கொள்ளலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலை.யில் பி.எட், எம்.எட் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நீட்டிப்பு
ஆசிரியா் கல்வியியல் பல்கலை.யில் பருவத் தோ்வு வினாத்தாள் குழப்பம்: தமிழக அரசு தீவிர நடவடிக்கை

தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!
பி.எட். தோ்வு மையங்களில் தலையீடு: பல்கலைக்கழகப் பதிவாளா் எச்சரிக்கை!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



