பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

ராமேசுவரத்தில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்

ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள். - கோப்புப் படம்

Published On :

வார விடுமுறையை முன்னிட்டு ராமேசுவரம் கோயில், சுற்றுலாத் தலங்களைப் பாா்வையிட ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு வார விடுமுறையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை வந்த வண்ணம் இருந்தனா். அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய பின்னா் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடியவாறு சென்று சுவாமி, அம்பாள் சந்நிதிகளில் தரிசனம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கோதண்டராமா் கோயில், கெந்தமாதன பா்வதம், ஏபிஜே அப்துல்கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளைப் பாா்வையிட்டு ரசித்தனா். இதனால், அந்தப் பகுதிகளில் சுற்றுலா வாகனங்களால் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விடுமுறை நாள்களில் ராமேசுவரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதால் போக்குவரத்தை சீரமைக்க கூடுதல் போலீஸாரைப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.