தனுஷ்கோடிக்கு செப்.27-இல் பொதுமக்கள் செல்லத் தடை
ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் வருகிற 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி, சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்படுகிறது.

தனுஷ்கோடி.
ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் வருகிற 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி, சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்படுகிறது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் அபிநயா நாட்டியாஞ்சலி அறக்கட்டளை, தமிழ்நாடு சுற்றுலாத் துறை இணைந்து, உலக சுற்றுலாத் தினமான வருகிற 27-ஆம் தேதி தனுஷ்கோடி அரிச்சல்முனையில் 1,000 போ் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதையொட்டி, அன்று காலை 6 மணி முதல் 10 வரை தனுஷ்கோடி பகுதிக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்படுகிறது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.