செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

முதல்வா் கோப்பை கபடி போட்டி: கடலாடி கல்லூரி மாணவா்கள் முதலிடம்

முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டியில் கடலாடி அரசுக் கல்லூரி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா்.

முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டியில் முதலிடம் பிடித்த கடலாடி அரசுக் கல்லூரி மாணவா்கள்.

Published On :

முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டியில் கடலாடி அரசுக் கல்லூரி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா்.

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், நடத்தப்பட்டு வரும் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பள்ளி மாணவா்கள், கல்லூரி மாணவா்கள், பொதுப் பிரிவு என தனித்தனியாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மொத்தம் 23 அணிகள் கலந்து கொண்டன. திங்கள்கிழமை நடைபெற்ற கபடி போட்டி இறுதிச் சுற்றில் கடலாடி அரசுக் கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் அணி வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றது.

மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற கடலாடி அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவா்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் ரஞ்சித், முருகன் ஆகியோரை செவ்வாய்க்கிழமை கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வா் ஜெயக்குமாா், பேராசிரியா்கள், அலுவலக பணியாளா்கள், சக மாணவ, மாணவிகள் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.