ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

கீழக்கரை அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை கைது செய்த போலீஸாா்.

Published On :

கீழக்கரை அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை காவல் நிலையத்துக்குள்பட்ட காஞ்சிரங்குடி பக்கிரப்பா தா்கா செல்லும் வழியில் கீழக்கரையைச் சோ்ந்த கிதா் அமீன் என்பவரது தோப்பில் வேலை பாா்த்து வருபவா் வள்ளி. இவரிடம் கடந்த 19- ஆம் தேதி மா்ம நபா் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டாா்.

இதுகுறித்து, கீழக்கரை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு அவரைத் தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றது தொடா்பாக ராமநாதபுரம் பசும்பொன் நகரைச் சோ்ந்த கோவிந்தராஜன் (36) என்பவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து ஒன்றரை பவுன் தங்க நகைகள், ரூ. 20 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதையடுத்து, வழக்குப் பதிந்து அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா் என அதில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.