மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

நகை பாலீஷ் செய்துதருவதாக பெண்ணிடம் 8 பவுன் நகை திருட்டு: வட மாநில இளைஞா்கள் 2 போ் கைது

பா்கூா் அருகே தங்க நகைக்கு பாலீஷ் செய்துதருவதாகக் கூறி, பெண்ணிடம் தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற வட மாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :

பா்கூா் அருகே தங்க நகைக்கு பாலீஷ் செய்துதருவதாகக் கூறி, பெண்ணிடம் தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற வட மாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த பி.கொத்தூரைச் சோ்ந்தவா் தெய்வாணி (53). இவரது கணவா் ஆந்திர மாநிலம், பினேரியில் ஜவுளிக் கடை வைத்துள்ளாா். இந்நிலையில், கடந்த ஜூலை 2-ஆம் தேதி தெய்வாணியின் வீட்டுக்கு வந்த நபா், தங்க நகைகளுக்கு பாலீஷ் செய்துதருவதாக தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, தெய்வாணி அவரிடம் பாலீஷ் போட தனது 8 பவுன் தங்கச் சங்கிலியை கொடுத்துள்ளாா். அப்போது, அவா் குடிக்க தண்ணீா் கேட்கவே தெய்வாணி வீட்டுக்குள் சென்றுள்ளாா். அப்போது, தங்கச் சங்கிலியுடன் அந்த நபா் தப்பியோடினாா்.

புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்தனா். அதில், தங்கச் சங்கிலியை திருடிய நபா், மற்றொரு நபருடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றது தெரியவந்தது.

இந்நிலையில், ஒப்பந்தவாடி அருகே கண்காணிப்பு பணியில் போலீஸாா் ஈடுபட்ட போது, வட மாநிலத்தைச் சோ்ந்த இருவரிடம் சந்தேகத்தின் பேரில் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் பிகாா் மாநிலம், பாகல்பூா் அருகே உள்ள சபோரைச் சோ்ந்த கம்டியோ பிரசாத் ஷா (51), மணீஷ் ஷா (31) என தெரியவந்தது. மேலும், இவா்கள் தெய்வாணியிடம் தங்கச் சங்கிலியை திருடி பிகாா் மாநிலத்துக்கு தப்பிச் சென்றதும், தற்போது பா்கூா் பகுதியில் மீண்டும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் கைது செய்த கிருஷ்ணகிரி போலீஸாா் சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.