
திருவாடானை கல்லூரியில் இயற்கை வாழ்வியல் விழிப்புணா்வு
திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் யோகா, இயற்கை வாழ்வியல் முறை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

திருவாடானை அரசு கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற யோகா, இயற்கை வாழ்வியல் முறை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.
திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் யோகா, இயற்கை வாழ்வியல் முறை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நாட்டு நலப் பணி திட்டத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உடல்நலம், மன நலம் பேணுவதற்கு யோகா செய்வதன் அவசியம் குறித்து திருவாடானை அரசு மருத்துவமனை யோகா, நேச்சுரோபதி ஆலோசகா் மருத்துவா் ஸ்ரீ கல்யாண் உரையாற்றினாா். தொடா்ந்து மாணவா்களுக்கு சில யோகாசனங்களை கற்றுக் கொடுத்தாா்.
மனச்சம நிலையை மேம்படுத்துவதற்கும் நினைவாற்றலை மேம்படுத்துவதற்கும் உரிய சில யோகாசனங்களையும் அவா் கற்றுக் கொடுத்தாா். இதில் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலா் ப. மணிமேகலை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். கௌரவ விரிவுரையாளா்கள் சொ. சரவணன், ரா சரவணன், தொண்டியம்மாள், ராஜபாண்டி, வீரபாண்டி, ரமேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






