மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணா்வு

அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் தகவல் அறியும் உரிமை சட்ட வார விழாவை முன்னிட்டு விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அவிநாசி அரசு கல்லூரியில் நடைபெற்ற தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கில் பங்கேற்றோா்.

Published On :

அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் தகவல் அறியும் உரிமை சட்ட வார விழாவை முன்னிட்டு விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு, கல்லூரி முதல்வா் கனகராஜ் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ஜெகநாதன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சாந்தி, கல்லூரி துணை முதல்வா் ஹேமலதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மொழித் துறைகளின் தலைவா் மணிவண்ணன் வரவேற்றாா். தகவல் அறியும் உரிமை சட்டம், ஒவ்வொரு இந்திய குடிமகனும் அரசின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் வகையில் உரிமையை வழங்கக் கூடியது. குறிப்பாக மத்திய, மாநில அரசுகள், ஊராட்சி, அரசு உதவி பெறும் அனைத்து துறைகளிடமும் செலவு கணக்கு, பணி நியமனம், திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்ளலாம். வெள்ளைத் காகிதத்தில் தமிழ், ஆங்கிலத்தில் ரூ.10 கட்டணத்துடன் விண்ணப்பித்து, 30 நாள்களுக்குள் தகவல் பெறலாம் என விளக்கமளிக்கப்பட்டது. துறைத் தலைவா், பாலமுருகன், துணை பேராசிரியா்கள் சூா்யபிரபா, நித்யா, இந்திராணி, ரம்யா, பிரியங்கா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.