விக்ரம் பொறியியல் கல்லூரியில் ஜன.7, 8}இல் வேலைவாய்ப்பு முகாம்

விக்ரம் பொறியியல் கல்லூரியில் பி.இ., பி.டெக்., எம்சிஏ, எம்.எஸ்சி. (சிஎஸ்/ஐடி) துறைகளின் இறுதியாண்டு மாணவர்களுக்கும், 2012ல் தேறிய பட்டதாரிகளுக்கும் ஜோஹோ கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு முகாம் ஜன.7, 8 தேதிகளில் காலை 9 மணி அளவில் கல்லூரி பணித் தேர்வு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
Updated on
1 min read

  இதில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துக் கல்லூரிகளில் 2013 ஆம் ஆண்டில் தேர்வு பெறும், பிராஜெக்ட் செய்ய விழையும் இறுதியாண்டு மாணவ, மாணவியர் மற்றும் 2012ல் தேறிய பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம்.

  பதவி-பிராஜெக்ட் பயிற்சி பெறுவோர், பயிற்சிக்குப் பிறகு மென்பொருள் பொறியாளர். உதவித் தொகை மாதத்திற்கு ரூ. 6,000. பயிற்சிக்குப் பிறகு மாதத்திற்கு ரூ. 25,000. பதிவுக் கட்டணம் ரூ. 50 செலுத்த வேண்டும்.

  தேர்வு முறை-ஜெனரல் ஆப்டிட்டியூட் அண்டு புரோகிராமிங் எழுத்துத் தேர்வு, தொழில்நுட்ப நேர்காணல், எச்.ஆர். நேர்காணல்.

 இதில் கலந்து கொள்ள விரும்புவோர் புகைப்படத்துடன் இரு பயோ டேட்டா கொண்டுவர வேண்டும்.

  மேலும் தகவல் பெற 9600955074, 9003996860, 9443038419 ஆகிய  எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் சு. கதிர்வேலு தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com