யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அழகப்பச் செட்டியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் கண்டுபிடிப்புகளுக்கு பரிசளிப்பு

காரைக்குடி அழகப்பச் செட்டியார் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் திறன் 2012 எனும் மாணவர் கண்டுபிடிப்புகளுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:27 pm

தினமணி

காரைக்குடி அழகப்பச் செட்டியார் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் திறன் 2012 எனும் மாணவர் கண்டுபிடிப்புகளுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

  கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் திறன் எனும் அமைப்பு தொடங்கப் பட்டு மாணவர்கள் கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது.

  இந்த ஆண்டு மாணவர்கள் கண்டுபிடிப்புகளுக்கு திறன் 2012 எனும் பரிசு வழங்கும் விழா முருகப்பா கலையரங்கில் நடை பெற்றது. விழாவில், கல்லூரி முதல்வர் அ.  மாலா தலைமை வகித்தார். பேராசிரியர் ராஜசங்கர் முன்னிலை வகித்தார்.

  தமிழ்நாடு மின்வாரிய முன்னாள் கூடுதல் தலைமைப் பொறியாளர் வி. சங்கரநாராயணன், சென்னை சி.ஆர். நாராயணராவ் கட்டுமான வடிவமைப்பு இயக்கு நர் எல்.வெங்கடேஷ், சென்னை லியர் கார்ப்பொரேஷன் பொறியாளர் வி. ராமகிருஷ் ணன், ஃ போர்டு கார் நிறுவனத்தின் பொதுமேலாளர் (தொழில்நுட்ப இயக்கம்) கிருஷ்ணமூர்த்திபிரபு உள்ளிட்டோர் பேசினர்.

  மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டன.  மாணவர்களது கண்டுபிடிப்புகளை பார்வைக்காக வைத்திருந்தனர்.   இதில் சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், மாற்றுத் திறனாளிகளும் இயக்கும் வகையிலும் தானே மின்கலத்தில் மின் சேமிப்பை ஏற்படுத்தி இயங்கும் எஃபி சைக்கிள் 2012 எனும் மூன்று சக்கர சைக்கிளும், ஆட்டோமேடிக் ரோபோ,  ரத்த வங்கி தகவலுக்கான தனி இணையதளம் எனப் பல்வேறு கண்டுபிடிப்புக்களை மாணவர்கள் வைத்திருந்தனர்.

  விழாவில் இறுதியாண்டு மாணவர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண் டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.