அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட மகன் கொலை: தந்தை, சகோதரர் கைது

சிவகங்கையில், மதுபோதையில் அடிக்கடி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட மகனை கொலை செய்து, சடலத்தை நுகர்வோர் நீதிமன்ற வளாகத்தில் வீசிய தந்தை, மற்றொரு மகன் இருவரையும் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

Updated On :

சிவகங்கையில், மதுபோதையில் அடிக்கடி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட மகனை கொலை செய்து, சடலத்தை நுகர்வோர் நீதிமன்ற வளாகத்தில் வீசிய தந்தை, மற்றொரு மகன் இருவரையும் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

 சிவகங்கை கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி (29). இவர் கடந்த 7ஆம் தேதி நுகர்வோர் நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இதில், போதைப்பழக்கத்துக்கு அடிமையான பாலாஜி வீட்டில் பணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். கடந்த செப்.6 ஆம் தேதி இரவும் பணம் கேட்டு தந்தையிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை முருகன், மற்றொரு மகன் ராம்குமார்(26) இருவரும் பாலாஜியின் கழுத்தை நெரித்துக் கொன்று, அவரது சடலத்தை நுகர்வோர் நீதிமன்ற வளாகத்தில் வீசிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து தந்தை முருகன், சகோதரர் ராம்குமார் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.