திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

கருப்பூரில் நாட்டு நலப் பணி திட்ட சிறப்பு முகாம்

திருப்பத்தூர் அருகே கருப்பூர் ஊராட்சியில் அப்சா கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் அழகப்பா பல்கலைக் கழகம் இணைந்து நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமை வெள்ளிக்கிழமை நடத்தினர்.

Published On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

திருப்பத்தூர் அருகே கருப்பூர் ஊராட்சியில் அப்சா கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் அழகப்பா பல்கலைக் கழகம் இணைந்து நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமை வெள்ளிக்கிழமை நடத்தினர்.

 முகாமுக்கு அப்சா கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் சோலைஅழகு சோமையா முன்னிலை வகித்தார். அழகப்பா பல்கலைக் கழக நாட்டுநலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் வாழ்த்திப் பேசினார். பொருளியல் துறை பேராசிரியர்கள் இளங்கோவன், மரியரத்தினம் மற்றும் வணிகவியல் துறைபேராசிரியர் காளிதாஸ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.  முகாமில் ஒரு குளமும், ஒரு வீதியும் தேர்ந்தெடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. இதையடுத்து இந்தியாவுக்கு வலிமையான இளைஞர்களே முன்னோடிகள் எனும் தலைப்பில் கருத்தரங்கமும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் அமைப்பாளர்களாக பேராசிரியர்கள் ராஜேந்திரன், நாராயணசாமி ஆகியோர் செயல்பட்டனர். பேராசிரியை கனகசுபா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.