
தேவகோட்டை அருகே வேட்டைக்காரன்பட்டியில் சட்ட விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமில் ஊராட்சி மன்றத் தலைவர் அங்குச்சாமி வரவேற்றார். இதில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. முகாமுக்கு, தலைமை வகித்து சார்பு நீதிபதி கிருபாகரன் மதுரம் பேசியதாவது: கல்வி தான் ஒரு மனிதனை உயர்த்த முடியும். மற்றவர்கள் முன்னேற்றத்தை பார்த்து பொறாமைப்படாமல் ஆரோக்கியமான முறையில் கல்வி அறிவுடன் முயற்சி செய்தால் அனைவரும் முன்னேற முடியும். சட்டம் தெரியாது என்று கூறி யாரும் தப்ப முடியாது. அதே சமயம் கல்வி அறிவுடன் அடிப்படைச் சட்டங்களை தெரிந்து கொண்டு அதை மதித்து நடக்க வேண்டும். பொதுமக்கள் தங்களின் சட்டம் மற்றும் சட்டம் சாராத பிரச்னைகளுக்கு எங்கள் குழுவை அணுகி பயன்பெறலாம் என்றார்.
முகாமில் மாவட்ட உரிமையியல் நீதிபதி கணேசன், குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜயகுமார், அரசு வழக்குரைஞர் சொர்ணலிங்கம், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ராஜபாண்டி, பள்ளி தலைமையாசிரியர் ஜெபமாலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குழுவின் நிர்வாக உதவியாளர் முரளிதரன் தொகுத்து வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





