ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

அழகப்பா பல்கலை.யில் வல்லபபாய் பட்டேல் பிறந்த நாள் விழா

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சார்பில் சர்தார் வல்லபபாய் பட்டேலின் 142-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 3:15 am

DIN

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சார்பில் சர்தார் வல்லபபாய் பட்டேலின் 142-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில், பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் கே. குருநாதன் துவக்க உரையாற்றினார். பல்க லைக்கழகத்தின் ஆராய்ச்சிப்புல முதன்மையர் தா.ரா.குருமூர்த்தி சிறப்புரையாற்றினார். கலைப்புல முதன்மையர் கே. மணிமேகலை, மாணவர்கள் நலன் முதன்மையர் வி. பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.
விழாவில் சுதந்திரப்போராட்டத் தியாகி தேவகோட்டை சூறாவளி பொ. லெட்சுமணனுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
மேலும் மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றிபெற்றவர்களுக்கு காந்திகிராம பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் எஸ்.எம். ராமசாமி பரிசுகள் வழங்கிப் பேசினார்.
முன்னதாக வரலாற்றுத்துறைத் தலைவர் கே. கிருஷ்ணமூர்த்தி வரவேற்றுப்பேசினார். முடிவில் துறையின் உதவிப்பேராசிரியர் பரந்தாமன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.