மனைவியுடன் தகராறு: கணவர் தூக்கிட்டுத் தற்கொலை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதன்கிழமை மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.


சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதன்கிழமை மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இளையான்குடி கீழாயூர் பகுதியில் வசித்து வந்தவர் யூசுப் (28). இவரது மனைவி பாத்திமாபீவி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பாத்திமாபீவி கோபித்துக் கொண்டு உறவினர்கள் வீட்டுக்குச் சென்று விட்டார். இந்நிலையில் மனமுடைந்திருந்த யூசுப் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து இளையான்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...