சிவகங்கையில் காப்பீட்டு கழக ஊழியர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை காப்பீட்டு கழக அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சிவகங்கை மாவட்ட காப்பீட்டு கழக சங்கத்தின் தலைவர் செல்லப்பாண்டி தலைமை வகித்தார். சங்கத்தின் செயலர் கர்ணன், பொருளாளர் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்,பொது காப்பீட்டுப் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், ஜிஎஸ்டி வரி விதிப்பைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். சிவகங்கை மாவட்ட காப்பீட்டு கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.