ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நகர்ப்புற நக்சல் போல் நடந்து கொள்கிறார் ராகுல்: கிரிராஜ் சிங் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி குறித்து கிரிராஜ் சிங் விமர்சனம்..

News image

கிரிராஜ் சிங்

படம் - EPS

Updated On :10 மார்ச் 2026, 8:29 am

இணையதளச் செய்திப் பிரிவு

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நகர்ப்புற நக்சல் போல் நடந்துகொள்வதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ராகுல் காந்தி அவையில் விவாதத்தை தவிர்ப்பதாகவும், வாக்களிப்பதைத் தவிர்த்து வருவதாகவும், மேற்கு ஆசிய மோதல், மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான விவாதங்களை தவிர்ப்பது மிகவும் மோசமான செயல்.

எனக்குப் புரியவில்லை, இப்படிப்பட்ட ஒரு எதிர்க்கட்சி தலைவரை நான் பார்த்ததில்லை. அவருக்கு எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லை, ராகுல் நகர்ப்புற நக்சல் போல நடந்து கொள்கிறார்.

எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும், வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் ஏன் அவர்களிடமிருந்து ராகுல் பயந்து ஓடுகிறார்?

முகலாய வம்சத்தின் கடைசி முகலாய பேரரசர் பகதூர் ஷா போன்று, காங்கிரஸுக்கும் அவர் அதே தான். போலி காந்தி குடும்பத்தின் அறியாமையிலிருந்த கடைசி இளவரசர் இவர்தான் என்று அவர் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து ஆளும் பாஜகவிற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நடைபெற்று காரசார விவதங்களுக்கு மத்தியில் அமைச்சர் கிரிராஜின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன.

Summary

Union Minister Giriraj Singh on Tuesday launched a sharp attack on Leader of Opposition in the Lok Sabha Rahul Gandhi, accusing him of behaving like an "urban naxal" and likening him to the last Mughal emperor, Bahadur Shah Zafar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.