சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

வண்டல், சவடு, கிராவல் மண் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை  மாவட்டத்தில் வண்டல், சவடு, கிராவல் மண் ஆகியவற்றை  இலவசமாக பெற விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

Updated On :9 ஏப்ரல் 2018, 1:06 am

சிவகங்கை  மாவட்டத்தில் வண்டல், சவடு, கிராவல் மண் ஆகியவற்றை  இலவசமாக பெற விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
 இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: விவசாயம், வீட்டு உபயோகம்  மற்றும் மண்பாண்டம் செய்தல் போன்ற பணிகளுக்கு அரசு புறம்போக்கு கண்மாய் மற்றும் ஊருணிகளில் படிந்துள்ள  வண்டல் மண், சவடு மண், கிராவல் மண் ஆகியவற்றை இலவசமாக பெறுவதற்கு  தமிழக அரசு அனுமதி  வழங்கியுள்ளது. 
இத்திட்டத்தில்  பயன்பெற விரும்பும் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் சிவகங்கையில் உள்ள உதவி  இயக்குநர், வேளாண்மைத்துறை அலுவலம் அல்லது  வட்டாட்சியர் அலுவலங்களில்  விண்ணப்பித்து மண் அள்ளுவதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு மண் அள்ளும் போது அரசு  நிர்ணயித்துள்ள அளவு மட்டுமே அள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுகுறித்து கூடுதல் விவரங்கள் பெற  89099-91077 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் . இவ்வாறு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.