சிவகங்கையில் கால்நடை பராமரிப்புத்துறையின் அஸ்காட் திட்டம் மற்றும் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் கால்நடைகளை பாதிக்கும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நோய்கள் பற்றிய கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்கிற்கு கால்நடை பராமரிப்புத் துறையின் மாவட்ட இணை இயக்குநர் கருணாகரன் தலைமை வகித்தார். குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் பேராசிரியர் செந்தூர்குமரன் முன்னிலை வகித்தார். இதில், புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் பேராசிரியர்
எஸ்.சிவசீலன் கால்நடை மருத்துவர்களுக்கான பயிற்சி அளித்தார்.
இக்கருத்தரங்கில் கால்நடைகளை பாதிக்கும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நோய்கள் பாதிப்பு மற்றும் தடுப்பூசி முறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கால்நடைகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள், அதற்கான தீர்வுகள் குறித்து கால்நடை மருத்துவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து கால்நடைகளின் நோய் பகுப்பாய்வு பற்றிய கருத்தரங்க மலர் வெளியிடப்பட்டது.
குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் உதவி பேராசிரியர் குமரவேல், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் கோ.ஏஞ்சலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் கோவில்ராஜா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

