சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி சிவன் கோயிலில் திருவாசக முற்றோதல் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.
திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் பூங்குழலி உடனாய திருநோக்கிய அழகியநாதர்
சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருமுற்றோதல் விழாவை முன்னிட்டு பல பகுதிகளிலிருந்தும் சிவனடியார்கள் கூடினர்.
கடந்த சனிக்கிழமை மாலை பல்வேறு வாத்தியங்கள் முழங்க, மாணிக்கவாசகர் உற்சவர் சிலை மலர்களால் அலங்கரித்து ரதத்தில் வைத்து திருப்பாச்சேத்தி வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
அதைத்தொடர்ந்து கோயிலில் திருமுற்றோதல் பெருவிழா நடந்தது. சிவ தொண்டர் சிவதாமோதரன் இதில் கலந்து கொண்டு சிவபுராணம் குறித்து பேசினார்.
காலை முதல் மாலை வரை நடந்த, இந்நிகழ்ச்சியின்போது சிவனுக்குரிய பல்வேறு வகையான கைலாய வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
அப்போது சிவ தொண்டர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இவ்விழாவை முன்னிட்டு
கோயிலில் மூலவர்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் கோயிலில் அன்னதானம் நடந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகை செல்வோர் கவனத்துக்கு... இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

மே 5 வரை சென்னை, வேலூரில் கடும் வெப்ப நிலை நிலவும்!

அதிரடியாக உயர்ந்த வர்த்தக சிலிண்டர் விலை: எவ்வளவு?

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 8 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

