காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக "ஸ்வயம்' இணைய வழிக்கல்வியை கடந்த கல்வியாண்டில் 1,151 மாணவர்கள் தேர்வு செய்துள்ளதாக துணைவேந்தர் நா. ராஜேந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் மேலும் கூறியதாவது: ஸ்வயம் இணைய வழிக் கல்வியை மத்திய அரசு வடிமைத்து அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூலம் கல்வி கற்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது. மாணவர்கள் தற்போதுள்ள பாடத்திட்டத்தினை ஸ்வயம் இணையவழி கல்வி மூலம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பல்கலைக்கழகத்தில் யு.ஜி.சி வழிகாட்டுதலின்படி பல்கலைக்கழக மாணவர்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்றவாறு பாடங்களை தேர்வு செய்யலாம். இந்தப்பாடங்கள் அவர்களுடைய சுய கற்றலுக்காகவோ அல்லது மதிப்பெண் மாற்றமாகவோ இருக்கலாம். ஸ்வயம் வாயிலாக ஏராளமான தரமான விடியோ பாடங்கள் இந்தியாவிலுள்ள பெருமை வாய்ந்த கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
இக்கல்வியில் ஒவ்வொரு மாணவரும் வழக்கமான பாடத்தினை தவிர ஸ்வயம் விடியோ அளிக்கக்கூடிய தரமான பாடத்திட்டத்தில் வழங்கப்படும் பாடத்தினையும் தேர்ந்தெடுக்கவேண்டும். அழகப்பா பல்கலைக்கழகத்திலுள்ள பல்வேறு துறைகளின் ஸ்வயம் ஒருங்கிணைப்பாளர்களுக்கான கூட்டம் அண்மை யில் நடைபெற்றது. இதில் அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அழகப்பா பல்கலைக்கழகம் ஸ்வயம் இணைய வழிக்கல்வி வழங்குவதில் முன்னோடியாகத் திகழ்கிறது. இப்பல்கலைக்கழகத்தில் கடந்த கல்வியாண் டில் 1,151 மாணவர்கள் ஸ்வயம் இணையவழிக் கல்வியை தேர்வுசெய்துள்ளனர். அந்தப்பாடங்கள் அனைத்துக்கும் பல்கலைக் கழக கல்விக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
ஸ்வயம் பற்றிய விழிப்புணர்வை புதிதாக பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ள முதலாண்டு மாணவர்களுக்கு வழங்கவும், ஸ்வயம் பற்றிய ஆர்வத்தினை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரப்பான்பூச்சிகளால் ஸ்தம்பிக்கும் தில்லி... இன்றைய நேரலை (ஜூலை 22)

சிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை பாடலை தமிழ், தெலுங்கில் பாடிய ஸ்ரீ கௌரி ப்ரியா!






