இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

காரைக்குடியில் ரூ.7.23 கோடியில் சாலை, பள்ளிக் கட்டடப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறையின் மூலம் நடைபெற்று வரும்

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறையின் மூலம் நடைபெற்று வரும் ரூ. 7.23 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் க. லதா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
       மாநில நெடுஞ்சாலைத் துறை மூலம், குன்றக்குடியிலிருந்து காரைக்குடி வரை செல்லும் 1.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ. 99 லட்சத்திலும், பாதரக்குடியிலிருந்து காரைக்குடி வரை செல்லும் 2.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ. 1.31 கோடியிலும் மேற்கொள்ளப்பட்ட தார் சாலை பணிகளையும், அரியக்குடியிலிருந்து காரைக்குடி வரையில் மாவட்ட சாலைத் திட்டத்தின் கீழ் 2.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.1.72 கோடியில் சீரமைக்கப்பட்டு சாலையோரம் கிராவல் பரப்பப்பட்டுள்ள பணிகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
    தொடர்ந்து, காரைக்குடி ஆலங்குடியார் வீதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி நடப்பாண்டில் உயர்நிலைப் பள்ளியாக நிலை உயர்த்தப்பட்டுள்ளதால் இடைநிற்றல் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 60 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பீட்டில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு புதிய வகுப்பறைக் கட்டடப் பணிகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். 
     மேலும், காரைக்குடி அருகே திருவேலங்குடி அரசு நடுநிலைப் பள்ளி நடப்பாண்டில் நிலை உயர்த்தப்பட்டிருப்பதால் அங்கு ரூ.1 கோடியே 60 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பணிகளையும், கட்டுமானப் பொருள்களின் தரம் குறித்தும் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
     இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் மோகனகாந்தி, செயற்பொறியாளர் தமிழகன், பொதுப்பணித் துறை (கட்டடங்கள்) செயற்பொறியாளர் கண்ணன், உதவிப் பொறியாளர்கள் பாலசுப்பிரமணியன், முத்துஜெயம், பாசியம், வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரமகாலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் சென்றிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.