பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

மானாமதுரை பகுதியில் திருக்கூடல்மலை நவநீத பெருமாள் பவனி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் திங்கள்கிழமை இரவு குதிரை வாகனத்திலும், செவ்வாய்க்கிழமை பகலில் பல்லக்கிலும் திருக்கூடல்மலை நவநீத பெருமாள் பவனி வந்தார். 

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் திங்கள்கிழமை இரவு குதிரை வாகனத்திலும், செவ்வாய்க்கிழமை பகலில் பல்லக்கிலும் திருக்கூடல்மலை நவநீத பெருமாள் பவனி வந்தார். 
      மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் கட்டளைப்படி, மதுரை இருளப்பக் கோனாரால் திருப்பரங்குன்றம் திருக்கூடல் மலையில் உள்ள ராமலிங்க விலாசத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவநீதப் பெருமாள் ஆண்டுதோறும் ஆடிப் பௌர்ணமிக்கு திருக்கூடல் மலையிலிருந்து புறப்பாடாகிறார். பின்னர், சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் உலாவிய திருப்புவனம், மானாமதுரை ஆகிய பகுதிகளில் பவனி வந்து, மீண்டும் மலைக்கு திரும்புவது வழக்கமாக உள்ளது.
      99 ஆவது ஆண்டாக, கடந்த ஆடிப் பௌர்ணமிக்கு அழகர்மலை தீர்த்தமாடி திருக்கூடல் மலையிலிருந்து புறப்பாடாகிய உற்சவர் நவநீத பெருமாள், திருப்புவனம், திருப்பாச்சேத்தி ஆகிய பகுதிகளில் எழுந்தருளியதை அடுத்து, திங்கள்கிழமை மாலை மானாமதுரை வந்தடைந்தார்.
    அண்ணா சிலை அருகேயுள்ள ஐயப்பன் கோயிலில் செங்கல் காளவாசல் தொழிலாளர்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த திருக்கண்ணில் பெருமாளுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இரவில் தாயமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள சுப்ரமணியர் கோயிலில் குதிரை வாகனத்தில் நவநீத பெருமாள் சூட்டுக்கோலுடன் எழுந்தருளி அருள்பாலித்தார்.    மண்டகப்படிதாரர்கள் சார்பில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. ஏராளமானோர் மண்டகப்படிக்கு வந்து நவநீதப் பெருமாளை தரிசித்தனர். அதைத் தொடர்ந்து, இங்கிருந்து புறப்பட்ட பெருமாள் பல வீதிகளின் வழியே பவனி வந்தார். இரவு, சங்குப்பிள்ளையார் கோயிலில் தங்கியிருந்த நவநீத பெருமாள், செவ்வாய்க்கிழமை காலை இங்கிருந்து அலங்காரத்துடன் பல்லக்கில் புறப்பாடாகி, மேல்கரை பகுதியில் வீதி உலா வந்தார். பின்னர், கீழமேல்குடி, பீசர்பட்டினம், மேலமேல்குடி, தீத்தான்பேட்டை ஆகிய கிராமங்களில் வலம் வந்து, கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் இல்லம் சென்றடைந்தார். ஆகஸ்ட் 19 ஆம் தேதி நவநீத பெருமாள் திருக்கூடல்மலை ராமலிங்க விலாசம் சென்றடைகிறார்.
    இந் நிகழ்ச்சியை, இருளப்பக் கோனாரின் 5 ஆவது தலைமுறையான ராமலிங்க விலாசத்தின் நிர்வாகி தட்சிணாமூர்த்தி யாதவ் நடத்தி வருகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.