காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலை நிலைக் கல்வியில் 2018 மே மாதம் நடைபெற்ற முதுகலைத் தேர்வுக்கான முடிவுகள் அழகப்பா யுனிவர்சிட்டி. ஏசி. இன் என்ற இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
எம்.பி.ஏ. பொது, பன்னாட்டு வணிகம், வங்கியியல் மற்றும் நிதி, நிறுமச்செயலியல், பி.எம், இடப்பெயர்வு மேலாண்மை, ஹெச்.எம், சுற்றுலாவியல், இ.எம், மனிதவள மேலாண்மை, ஆர்.எம், டி.எம், நிறுமச்செயலியல் மேலாண்மை, சந்தையியல் மேலாண்மை, நிதியியல் மேலாண்மை, எஸ்.எம், உற்பத்தி மற்றும் செயல்பாட்டு மேலாண்மை, ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த மேலாண்மையியல், எம்.சி.ஏ மற்றும் நேரடி இரண்டாமாண்டு, எம்.எஸ்சி.,-யில் இயற்பியல், வேதியியல், சைக்கா லஜி, தகவல் தொழில்நுட்பவியல், சி.எஸ், எம்.எஸ்.டபிள்யு, எம்.ஏ.,-யில் பிஎம் அன்ட் ஐஆர், இதில் நேரடி இரண்டாமாண்டு, எம்.ஜே.எம்.ஜி, குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியியல், முதுநிலை நூலகத்தகவல் அறிவியல், கல்வியியல், தமிழ், வரலாறு, ஆங்கிலம், பொருளியல், சோசியாலஜி, எம்.காம்., எம்.காம்., (எப் அன்ட் சி) ஆகிய முதுநிலைப்படிப்பு களுக்கும், பி.ஜி டிப்ளமோ பிரிவான பி.ஜி.டி.பி.எம், பிஎம் அன்ட ஐஆர், ஹெச்.ஆர்.எம், யோகா, எச்.ஏ, எஸ்.எம் ஆகிய படிப்புகளுக்கும், சான்றிதழ் படிப்பான மருத்துவமனை மேலாண்மை, கணினி மேலாண்மை, ஏற்றுமதி மேலாண்மை ஆகிய படிப்புகளுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மறுமதிப்பீட்டிற்கு 24.8.2018-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பம் பல்கலைக் கழக இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டு மறுமதிப்பீட்டுக்கட்டணமாக பாடம் ஒன்றுக்கு ரூ. 500 பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி என்ற பெயரில் வரைவோலை எடுத்து தேர்வுப்பிரிவுக்கு விண்ணப்பிக்கு மாறு தேர்வாணையர் பி. சக்திவேல் தெரிவித்துள்ளார்.