
மக்களின் சுதந்திரத்தில் பாஜக தலையிடக்கூடாது என்று சொல்வதற்கு காங்கிரசுக்கு உரிமை இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
நாட்டின் 72- ஆவது சுதந்திர தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரிச்சாலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலை அருகே புதன்கிழமை தேசியக்கொடியை ஏற்றிவைத்து அவர் பேசியதாவது:
நாடு அடிமைப்பட்ட காலத்தில் அடிமைகளாக இருந்தவர்கள் நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் அடிமைகளாகவே இருக்கக் கூடாது. யாருக்கும் பேச்சுரிமை, எழுத்துரிமை, கல்வி உரிமை, தகவலறியும் உரிமை, வேலை வாய்ப்பு உரிமை போன்ற எந்த உரிமை மறுக்கப்பட்டாலும் அந்த நாடு சுதந்திரம் பெற்ற நாடாக இருக்கமுடியாது.
அனைத்து மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான்அன்றைக்கு காங்கிரஸ் கட்சி சுதந்திரப்போராட்டத்திற்கு தலைமையேற்று சுதந்திரத்தைப்பெற்றுத்தந்தது.
நாட்டின் சுதந்திரப்போராட்டத்தில் பங்குபெறாதவர்கள் (பாஜக) இன்றைக்கு சுதந்திர தினவிழாவில் பங்குகொள்வதை நான் வரவேற்கிறேன். அதேநேரத்தில் சுதந்திர நாட்டிலே யாருடைய சுதந்திரத்திலேயும் அவர்கள் தலையிடக்கூடாது.
யாருடைய உரிமைகளையும் பறிக்கக்கூடாது என்று சொல்வதற்கு காங்கிரஸ் கட்சியினருக்கு உரிமையுள்ளது என்பதைத்தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிஸ் சட்டபேரவைத்தலைவர் கேஆர். ராமசாமி, காரைக்குடி முன்னாள் எம்.எல்.ஏ என். சுந்தரம், நகர காங்கிரஸ் தலைவர் பாண்டிமெய்யப்பன், சங்கராபுரம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் எஸ். மாங்குடி மற்றும் காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







