மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

சொர்ண காளீஸ்வரர் திருக்கல்யாணம்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சொர்ணவல்லி சமேத சொர்ண காளீஸ்வரர் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் புதன்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சொர்ணவல்லி சமேத சொர்ண காளீஸ்வரர் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் புதன்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.
  கடந்த ஆக. 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான, திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது. 
இதையொட்டி, சுவாமிக்கும், அம்மனுக்கும் தைலம், திருமஞ்சனம், பால், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, உற்சவரான சுவாமி, அம்மன் பிரியா விடையுடனும், அம்மன் தனியாகவும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினர். 
இதையடுத்து,திருக்கல்யாணம் நடைபெற்றது.  திருக்கல்யாண விழாவில்,காளையார்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் பா.இளங்கோ, காளையார்கோவில் சரக கண்காணிப்பாளர் போ.சரவணகணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.