தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

சிவகங்கையில் இடிந்து விழும் நிலையில் உள்ள காவலர் குடியிருப்புகள் சீரமைக்கப்படுமா?

சிவகங்கையில் பழுதாகி இடிந்து விழும் நிலையில் உள்ள காவலர் குடியிருப்புகள் சீரமைக்கப்பட வேண்டும் என அதில் வசித்து வரும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:02 pm IST

சிவகங்கையில் பழுதாகி இடிந்து விழும் நிலையில் உள்ள காவலர் குடியிருப்புகள் சீரமைக்கப்பட வேண்டும் என அதில் வசித்து வரும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை நகரில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் பயன்பெறும் வகையில் கடந்த 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் சார்பில்  சிவகங்கை ராமச்சந்திரா நினைவு பூங்கா அருகே காவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டன. 
இதில், 60 வீடுகள் உள்ளடக்கிய 8 அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் முதல்நிலை காவலர் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை வசித்து வருகின்றனர். அதற்காக அவர்களிடமிருந்து பதவிக்கேற்ப மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.1200 முதல் ரூ.2500 வரை வாடகையாக சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.   
இந்நிலையில், இந்த காவலர் குடியிருப்புகளில் உள்ள சுவர் மற்றும் அஸ்திவாரம்  அனைத்தும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும், இதன் காரணமாக அங்கு வசித்து வரும் காவலர் குடும்பங்கள் மிகுந்த அச்சத்துடனே வாழ வேண்டிய  சூழ்நிலையில்  இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 
   இதுகுறித்து அந்த குடியிருப்பில் வசித்து வரும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கூறியது: அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடத்தின் அடிப்படை நிலையிலான கட்டுமானங்கள் அனைத்தும்  சிதிலமடைந்து காணப்படுகிறது. ஆகவே, கட்டடம் எப்போது இடிந்து விழும் என்ற நிலையில் தினசரி அச்சத்துடனே வாழ வேண்டிய நிலை உள்ளது.  
இவை தவிர, கட்டடத்தின் மேல்புற சுவர் (சீலிங்), உள்புறம் மற்றும் வெளிப்புற சுவரில் பூசப்பட்ட சிமென்ட் கலவை பெயர்ந்து விழுவதால், அங்கு வசிப்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும்,குடியிருப்பு பகுதியின் தேவையைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி பழுதடைந்துள்ளது.
இதனால், குடியிருப்பில் வசித்து வரும் காவலர்களின் குடும்பங்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றோம். ஆகவே, இதனைக் கவனத்தில் கொண்டு பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள காவலர்கள் குடியிருப்பை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.