சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தீக்குளித்த இளம்பெண் திங்கள்கிழமை உயிரிழந்தார். இது தொடர்பாக கணவர், மாமியார் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
திருப்புவனம் அருகே சொட்டதட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பூவேந்திரன். இவரது மகள் கற்பகவள்ளி(26). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டம் கல்யாணபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி(30) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது, இதுவரை குழந்தை இல்லை. இந்நிலையில் கணவர் பெரியசாமியும் மாமியார் பிச்சையம்மாளும் கற்பகவள்ளியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சொட்டதட்டி கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்த கற்பகவள்ளி மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கற்பகவள்ளி ஞாயிற்றுக்கிழமை உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் திங்கள்கிழமை மாலை உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து கற்பகவள்ளி தாய் மகாமுனி திருப்புவனம் காவல் நிலையத்தில்அளித்த புகாரின் பேரில் கணவர் பெரியசாமி, மாமியார் பிச்சையம்மாள் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - ஈரான் இடையே போர்நிறுத்தமா? டொனால்ட் டிரம்ப் பதிவு!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுதான் மிகவும் முக்கியம்; அறிமுக வீரர் மானவ் சுதர் கூறியதென்ன?

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

இன்றைய செய்திகள் ஜூன் 8 - நேரலை!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


