சிவகங்கை மாவட்டம் தி.பழையூர் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே அணுகுசாலை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தினிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனு விவரம்: திருப்புவனம் அருகே தி.பழையூரிலிருந்து பெரிய கண்மாய்,அய்யனார் கோவில் வழியாக அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும் தார்ச் சாலை உள்ளது.
சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் மேலாக உள்ள வேளாண் நிலங்களில் விளையும் விளைப் பொருள்களை கொண்டு வருவதற்கு அந்த சாலை முக்கிய மார்க்கமாக உள்ளது. இவை தவிர, கலியாந்தூர், கொந்தகை உள்ளிட்ட கிராமங்களுக்கு வண்டிப் (குறுக்கு) பாதையாகவும் உள்ளது.
இந்நிலையில்,அந்த சாலையில் குறுக்கிடும் மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக,தி.பழையூரிலிருந்து வரும் சாலை மார்க்கம் தற்போது அடைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் தங்களது விளைப் பொருள்களை கொண்டு வர முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆகவே இதனைக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் தி.பழையூர் ரயில்வே மேம்பாலம் அருகே அப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும் வகையில் அணுகுச் சாலை அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சால்மன் மீனின் வாழ்க்கை சுழற்சியும் வலசை பயணமும்!

பிஇசிஐஎல் நிறுனத்தில் பொறியாளர், டெக்னீசியன் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவித்தொகையுடன் தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி!
ரவி மோகன் வீட்டில் ரூ. 10 லட்சம் வைர நகை, பணம் திருட்டு!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


