6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

உருவாட்டி பெரியநாயகியம்மன் கோயில் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உருவாட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீபெரியநாயகியம்மன் கோயில் பங்குனித் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 8:04 pm

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உருவாட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீபெரியநாயகியம்மன் கோயில் பங்குனித் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
           இவ்விழா கடந்த மார்ச்  21-ல் கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், வீதி உலா நடைபெற்றது.
     முக்கிய விழாவான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு தைலம், மஞ்சள் பொடி,  பால் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேருக்கு எழுந்தருளினார்.  பின்னர் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெற்றது.
  விழாவில் உருவாட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தீச்சட்டி எடுத்தும்,  காவடி எடுத்தும், அழகு குத்தியும் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.