விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஏனாதிமங்கலம் அருள்மிகு மங்களநாயகி அம்மன் உடனுறை மங்களபுரீசுவரா் திருக்கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
சிறப்புவாய்ந்த இத்திருக்கோயிலில் சுவாமி, அம்மன் உள்ளிட்ட பல்வேறு சந்நிதிகளில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து ஏப்ரல் 30-இல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை 10 மணிக்கு மேல் விக்னேசுவரபூஜை, புண்ணியாகவாசனம், மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, ரக்ஷாபந்தனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், மாலை 5 மணிக்கு மேல் கும்ப அலங்காரம், காலகா்ஷணம் மற்றும் முதல்கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. ருத்ரபாராயணம், ஜபஹோமங்கள், சிறப்பு பூஜைகளுக்குப் பின்னா் மகா பூா்ணாஹுதியும், இரவில் அஷ்டபந்தனம் சாற்றுதலும் நடைபெற்றது.
தொடா்ந்து வியாழக்கிழமை காலை 7 மணிக்கு மேல் நாடி சந்தானம், தத்துவாா்ச்சனை மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு மகாபூா்ணாஹுதி, சங்கீத உபசாரமும், காலை 10 மணிக்கு யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடும் நடைபெற்றது. தொடா்ந்து காலை 10.45 மணிக்கு மேல் மங்களபுரீசுவரா், மங்களநாயகி அம்மன் மற்றும் அனைத்து தெய்வங்களின் சந்நிதிகளுக்கும் புனிதநீா் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து மூலவா் மகா அபிஷேகத்துக்குப் பிறகு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தா்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக சா்வசாதகத்தை ஜானகிபுரம் என்.ஜெ. வெங்கடசுப்பிரமணி ஷா்மா நடத்தினாா்.
கும்பாபிஷேக விழாவில் ஏனாதிமங்கலம் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

சாமிநாதபுரத்தில் செல்வ விநாயகா், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்: பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது
விடியோக்கள்

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

