கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தந்தையின் சடலத்தை எடுத்து வந்தபோது விபத்து: மகன் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே செவ்வாய்க்கிழமை நோய்வாய்ப்பட்டு இறந்த தந்தையின் சடலத்தை

Updated On :29 மார்ச் 2018, 12:03 am

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே செவ்வாய்க்கிழமை நோய்வாய்ப்பட்டு இறந்த தந்தையின் சடலத்தை வீட்டுக்கு எடுத்து வந்தபோது, ஏற்பட்ட விபத்தில் மகன் பலத்த காயமடைந்தார்.
 திருப்பத்தூர் அருகே உள்ள வையாபுரிபட்டியைச் சேர்ந்தவர் சிவா (25). இவரது தந்தை செல்வம், சிறுநீரக பாதிப்பு காரணமாக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவர், உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, சிவா தனது தந்தையின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டு, பின்னால் இருசக்கர வாகனத்தில்  ஊருக்கு வந்துகொண்டிருந்தார்.
 திருக்கோஷ்டியூர் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையின் குறுக்கே இருந்த பேரிக்கார்ட்டில் மோதி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 
பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.