சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

குண்டர் சட்டத்தில் ரௌடி கைது

மானாமதுரை அருகே குண்டர் சட்டத்தில் ரௌடி புதன்கிழமை கைது செய்யப்பட்டார். 

Updated On :29 மார்ச் 2018, 12:04 am

மானாமதுரை அருகே குண்டர் சட்டத்தில் ரௌடி புதன்கிழமை கைது செய்யப்பட்டார். 
மானாமதுரை சிப்காட் போலீஸ் சரகம் வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு மகன் கொக்கு (எ) சடைமுனியன் (30). ரௌடியான இவர் மீது ஏற்கெனவே மானாமதுரை உள்பட பல காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராமு, தற்போது வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
சடைமுனியனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் லதாவுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்பேரில் சடைமுனியனை மானாமதுரை சிப்காட் போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.