சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

திருப்புவனம் ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் கோயில் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம்,  திருப்புவனத்தில் உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் சமேத செளந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 8:04 pm

சிவகங்கை மாவட்டம்,  திருப்புவனத்தில் உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் சமேத செளந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    இக்கோயிலில் பங்குனி திருவிழா கடந்த மார்ச் 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினசரி சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் நாள்தோறும் காலை,  மாலை இரு வேளைகளிலும் சுவாமி, அம்மன் பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் காமதேனு,  காளை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தனர். 8-ம் நாளான புதன்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.      9-ம் நாளான வியாழக்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு புஷ்பவனேஸ்வரர் மற்றும் செளந்தரநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனனைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமி அம்பாள் பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் தேருக்கு எழுந்தருளினர்.  காலை 10 மணியளவில் பக்தர்கள் தேரை வடம் பிடிக்க தேரோட்டம் தொடங்கியது.
  கீழ் ரத வீதி,  தினசரி சந்தை வளாகம், மதுரை - ராமேசுவரம் சாலை, சந்தை திடல் உள்ளிட்ட  வீதிகளில் வலம் வந்த தேர் நண்பகல் 11.50 மணியளிவில் நிலைக்கு வந்தது. 
  விழாவில், திருப்புவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  இன்று,  வெள்ளிக்கிழமை உற்சவ சாந்தி நிகழ்ச்சியுடன் பங்குனித் திருவிழா நிறைவு பெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.