சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள கோரவலசை கிராமத்துக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரும்படி கோரி, அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் க. லதாவிடம், கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனு விவரம்: காளையார்கோவில் வட்டம், மாரந்தை ஊராட்சிக்குள்பட்டது கோரவலசை கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில், இந்த கிராமத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றுடன் கூடிய தண்ணீர் தொட்டி பழுதடைந்து சில மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இதனால், கிராமப் பொதுமக்கள் அனைவரும் சுமார் 3 கி.மீ. தொலைவு நடந்து சென்று, அருகில் உள்ள கிராமங்களில் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகிறோம். இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, எங்களது கிராமத்துக்கு புதிதாக மேல்நிலைக் குடிநீர்த் தொட்டி அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு!

மிட்செல் சாண்ட்னர் ஒரு மாதம் கிரிக்கெட் விளையாட மாட்டார்: நியூசி. கிரிக்கெட் வாரியம்

ம.பி. படகு விபத்து; 9 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!

ரியோ ராஜ் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் அறிமுக போஸ்டர்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

