சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் திங்கள்கிழமை மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்ததில், மின்நிலையத்தில் மரங்கள் முறிந்து விழுந்து மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
காரைக்குடி மற்றும் சுற்று வட்டாரங்களில் கடந்த சில தினங்களாக மிதமான மழை பெய்து வந்தது. திங்கள்கிழமை பிற்பகல் வரை நகரில் வெயில் நிலவியது. மாலை 4 மணியளவில் கருமேகம் திரண்டு, பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த காற்றால், காரைக்குடி கழனிவாசல் மின் நிலையத்தில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு, கல்லூரிச் சாலை, புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் இரவு 7.45 மணிக்கே மின்விநியோகம் கிடைத்தது. மற்ற பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், நகரே இருளில் மூழ்கியது.
இதனிடையே, மின்வாரியப் பணியாளர்கள் ஒவ்வொரு பகுதியாக மரங்களை அப்புறப்படுத்தி, மின் விநியோகம் வழங்கி வருகின்றனர். மின்வாரியப் பணியாளர்கள் தொடர்ந்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், மின்வாரியப் பொறி யாளர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 5 வரை சென்னை, வேலூரில் கடும் வெப்ப நிலை நிலவும்!

அதிரடியாக உயர்ந்த வர்த்தக சிலிண்டர் விலை: எவ்வளவு?

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 8 மாவட்டங்களில் மழை!

காணாமல் போன குழந்தைகள் மீட்டெடுக்க சட்ட தன்னாா்வ தொண்டா்களுக்கு அழைப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

