இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

மறவமங்கலத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

மறவமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கிருஷ்ண ஜயந்தி ஊர்வலத்தை சிலர் தடுத்து நிறுத்தியதை அடுத்து, அப்பகுதி  பொதுமக்கள் சாலை  மறியலில் ஈடுபட்டனர்.   

Updated On :3 செப்டம்பர் 2018, 1:32 am

மறவமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கிருஷ்ண ஜயந்தி ஊர்வலத்தை சிலர் தடுத்து நிறுத்தியதை அடுத்து, அப்பகுதி  பொதுமக்கள் சாலை  மறியலில் ஈடுபட்டனர்.   
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ண ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவு கிருஷ்ணர் ஊர்வலம் நடைபெற்றது. 
வழக்கம் போல மேலத்தெருவில் உள்ள கோயில் முன்பு தொடங்கும் ஊர்வலம், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்த பின்னர் கோயிலில் நிறைவு  பெறுவது வழக்கம்.  
ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவு ஊர்வலம் நடைபெற்ற போது, சிலர்  பேருந்து நிலையம் பகுதிகளுக்குள் ஊர்வலம் வரக்கூடாது என தெரிவித்துள்ளனர். இதனால்  ஊர்வலத்தில் பங்கேற்ற பொதுமக்கள் அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு மறவமங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 
  தகவலறிந்து வந்த காளையார்கோவில் போலீஸார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி, ஏற்கெனவே திட்டமிட்ட பாதை வழியாக ஊர்வலத்தை நடத்துவதற்கு அனுமதியளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.