
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தென்மாபட்டு சமயபுர முத்துமாரியம்மன் கோயில் மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு புதன்கிழமை விளக்குப்பூஜை நடைபெற்றது.
தென்மாபட்டு சீதளிகீழ்கரை மேல் அமைந்துள்ள இக்கோயில் புனரமைக்கப்பட்டு கடந்த 48 நாள்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தினமும் மண்டல பூஜைகள் நடைபெற்று வந்தன. புதன்கிழமை 48 ஆவது நாளை முன்னிட்டு விளக்குப் பூஜை நடைபெற்றது. இப்பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் குத்துவிளக்கிற்கு மலர், குங்குமம் ஆகியவற்றால் வேதமந்திரங்கள் முழங்க பூஜை செய்தனர். இதில் பங்கு கொண்ட பெண்களுக்கு மங்கலப் பொருள்கள் பிரசாதமாக வழங்கபட்டது.
விழா ஏற்பாடுகளை சமயபுர முத்துமாரியம்மன் பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






