சிவகங்கை மாவட்டம், இளையான்குடி கூட்டுறவு வங்கித் தேர்தலில் திமுக அணியை சேர்ந்த 11 பேர் வெற்றி பெற்று, நிர்வாகக் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கூட்டுறவு அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டபோது, இளையான்குடி நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெற்றது. அதன்பின்னர், வாக்கு எண்ணிக்கை நடைபெறாத கூட்டுறவு அமைப்புகளுக்கு, வாக்கு எண்ணிக்கை நடத்த தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால், இளையான்குடி நகர கூட்டுறவு வங்கியில் வாக்குகள் எண்ணப்படவில்லை. பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வங்கியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், திமுகவை சேர்ந்த செல்லம்மாள், குமார், சரோஜ்பானு, சபீதாபேகம், செல்வி, அப்துல் ரசாக், பாலசுப்ரமணியன், முகமது ஆரிப், நஜீமுதீன், நாசர், செய்யதுகான் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு, திமுக இளையான்குடி மேற்கு ஒன்றியச் செயலர் சுப. மதியசரன், துணைச் செயலர் மலைமேகு, மாவட்டப் பிரதிநிதி கருணாகரன், காங்கிரஸ் கட்சி அல்அமீன் உள்பட கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

இடைத்தோ்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்: கடலூா் மாநகா் திமுக தீா்மானம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


