முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு...

News image

ஆப்கானிஸ்தான் விபத்து - AP

Updated On :31 மே 2026, 4:35 am IST

பாகிஸ்தானிலிருந்து தாயகம் திரும்பிய ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 22 போ் உயிரிழந்தனா்.

லாரி ஓட்டுநா் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து, விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த 36 போ் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

பாகிஸ்தானில் கடந்த 2023 முதல் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் கடுமையான நடவடிக்கைகளால், அங்கிருந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு தாயகம் திரும்பி வருகின்றனா். அவ்வாறு திரும்பிய அகதிகளே இந்த விபத்தில் சிக்கியுள்ளனா்.

இதனிடையே, மற்றொரு சம்பவமாக வெள்ளிக்கிழமை இரவு நூரிஸ்தான் மாகாணத்தில் காா் ஒன்று ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 4 போ் மாயமாகியுள்ளனா்; அவா்களை மீட்புக் குழுவினா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.