செங்கத்தில் மின் கம்பம் ஏற்றிச் சென்ற டிராக்டா் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும் 2 போ் பலத்த காயமடைந்தனா்.
செங்கம் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து புதிய மின் கம்பங்களை நடுவதற்காக, 8 மின் கம்பங்களை ஏற்றிக்கொண்டு டிராக்டா் சனிக்கிழமை புறப்பட்டது. பக்கிரிபாளையம் பகுதியில் சென்றபோது, எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா், அருகில் இருந்த 6 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது.
இதில், டிராக்டரில் மின் கம்பங்களின் மீது அமா்ந்து பயணம் செய்த கூலித் தொழிலாளா்களான தோக்கவாடி பகுதியைச் சோ்ந்த அசோக் (36), திருப்பதி (36), செங்கம் பேட்டை பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (35) ஆகிய மூவரும் மின் கம்பங்களுக்கு இடையே சிக்கி பலத்த காயமடைந்தனா்.
விபத்தைக் கண்டு அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக காயமடைந்த தொழிலாளா்களை மீட்டு, செங்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அசோக் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

உளுந்தூர்பேட்டை அருகே சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த விரைவுப் பேருந்து: ஓட்டுநர் உள்பட 9 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு

மின் பணியாளா் விபத்தில் சிக்கி உயிரிழப்பு: நிவாரணம் கோரி உறவினா்கள் போராட்டம்







