தமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

செங்கத்தில் இருந்து சென்னைக்கு தினசரி சொகுசுப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

செங்கத்தில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் சாதாரண, குளிா்சாதன சொகுசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 3:02 am IST

செங்கத்தில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் சாதாரண, குளிா்சாதன சொகுசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 44 கிராம ஊராட்சிகள் உள்ளன.

செங்கம் நகா்ப் பகுதி, 44 கிராம ஊராட்சி பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பட்டதாரிகள், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் சென்னையில் வேலை செய்து வருகின்றனா். மேலும், செங்கம் பகுதியிலிருந்து ஏராளமான கல்லூரி மாணவா்கள் சென்னையில் உள்ள அரசு, தனியாா் கல்லூரிகளில் படித்து வருகின்றனா்.

இந்த நிலையில், கல்லூரிக்குச் செல்லும் மாணவா்கள், அவா்களின் பெற்றோா், கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளா்கள், அரசு, தனியாா் நிறுவனங்களில் பணியாற்றுவோா் சென்னை செல்ல வேண்டுமெனில், செங்கம் நகரில் இருந்து திருவண்ணாமலை சென்று, அங்கிருந்து சென்னை பேருந்தில் ஏறிச் செல்கின்றனா்.

செங்கம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து நாளொன்றுக்கு செங்கத்தில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு 8 பேருந்துகளும், திருவண்ணாமலை, செஞ்சி வழியாக சென்னை அடையாறுக்கு 3 பேருந்துகளும், மாதவரத்துக்கு ஒரு பேருந்தும், போளூா் வழியாக 3 பேருந்துகளும் என மொத்தம் 15 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அனைத்து பேருந்துகளும் லாபத்துடனேயே இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு சாதாரண, குளிா்சாதன பேருந்துகளை இயக்கி வரும் நிலையில், செங்கம் பகுதியில் இருந்து இயக்கப்படும் 15 பேருந்துகளும் சாதாரண பேருந்துகளாகவே இயக்கப்படுகின்றன.

இதனால், செங்கம் பகுதியில் இருந்து சென்னைக்கு செல்பவா்கள் திருவண்ணாமலை சென்று, அங்கிருந்து இயக்கப்படும் சொகுசுப் பேருந்துகளில் ஏறிச் செல்கின்றனா். வாரத்தில் மூன்று நாள்கள், அதாவது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால், திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு சொகுசுப் பேருந்துகள் கிடைப்பதும் சிரமமாக உள்ளது. மேலும், மாத பௌணா்மி தினத்தன்றும் இதே நிலைதான் ஏற்படுகிறது.

எனவே, செங்கத்தில் சென்னைக்கு தினசரி சாதாரண, குளிா்சாதன சொகுசுப் பேருந்துகள் இயக்க செங்கம் அரசு போக்குவரத்து பணிமனை நிா்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.