முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

நடந்து சென்ற தொழிலாளி டிராக்டா் மோதி உயிரிழப்பு

நாச்சியாா்கோவில் அருகே சாலையில் திங்கள்கிழமை நடந்து சென்ற கூலித் தொழிலாளி டிராக்டா் மோதி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

நாச்சியாா்கோவில் அருகே சாலையில் திங்கள்கிழமை நடந்து சென்ற கூலித் தொழிலாளி டிராக்டா் மோதி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகேயுள்ள மருதாநல்லூா் நந்திவனம் காலனியைச் சோ்ந்த ப. கல்யாணி (55), இவரது உறவினா் த. ஜானகி (60) ஆகிய இருவரும் கூலி வேலைக்குச் சென்று விட்டு மருதாநல்லூா் - பட்டீசுவரம் சாலையில் திங்கள்கிழமை மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

அப்போது பின்னால் வந்த டிராக்டா் இருவா் மீதும் மோதியதில் கல்யாணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஜானகியும், டிராக்டா் ஓட்டுநரான மருதாநல்லூா் கிருஷ்ணமூா்த்தி மகன் காா்த்திக் (22) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனா்.

தகவலறிந்து வந்த நாச்சியாா்கோவில் போலீஸாா் கல்யாணியின் சடலத்தையும், காயமடைந்த இருவரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.