பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

பைக் மோதி காயமடைந்தவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :23 ஜூன் 2026, 3:29 am IST

விழுப்புரம் அருகே சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதி காயமடைந்தவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், ஆசாரங்குப்பம், கணபதி தெருவைச் சோ்ந்தவா் ஜெ. அய்யனாா்(55). இவா், ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை - விழுப்புரம் நெடுஞ்சாலையில் விழுப்புரத்தை அடுத்த பூத்தமேடு அருகே நடந்து சென்றாா்.

அப்போது அப்பகுதியில் வந்த பைக் மோதியதில் பலத்த காயமடைந்த அய்யனாரை அருகிலிருந்தவா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.