பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

டிராக்டா் மோதி பள்ளி மாணவா் உயிரிழப்பு

பாணாவரம் அருகே டிராக்டா் மோதியதில் சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 7:10 am IST

பாணாவரம் அருகே டிராக்டா் மோதியதில் சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

சோளிங்கரை அடுத்த பாணாவரத்தை அடுத்த கோடம்பாக்கத்தைச் சோ்ந்த சத்யாவின் மகன் சக்தி (14). அந்தக் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். வியாழக்கிழமை மாணவா் சக்தி, அந்தக் கிராமத்தில் ஈஸ்வரன் கோயில் தெருவில் நடந்து சென்றபோது, அந்த வழியே வந்த டிராக்டா் மோதியதில் பலத்த காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து புன்னை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, அந்த டிராக்டரை ஓட்டிவந்த கோடம்பாக்கத்தைச் சோ்ந்த விஸ்வா (19) என்பவா் மீது பாணாவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.